முக்கிய செய்திகள்

இலாகா இல்லாத முதல்வராக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் பொறுப்புக்கள்

1114

தமிழக முதல்வர் ஜெயலலிதா வசம் உள்ள உள்துறை உள்ளிட்ட முதல்வர் கவனித்த பணிகள் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பில், ”முதல்வர் ஜெயலலிதா வசம் உள்ள உள்துறை உள்ளிட்ட முதல்வர் கவனித்த பணிகள் நிதியமைச்சருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்வரின் ஆலோசனையின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவைக் கூட்டங்களுக்கு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிப்பார்.

இலாகா இல்லாமல், ஜெயலலிதா தொடர்ந்து முதல்வர் பதவியில் நீடிப்பார். முதல்வர் ஜெயலலிதா நலம் பெற்று திரும்பும் வரை இந்த ஏற்பாடு தொடரும்” என்று அறிவித்துள்ளார். இந்த உத்தரவுக்காக அரசியலமைப்புச் சட்டம் 166 (3) பிரிவை சுட்டிக்காட்டியிருக்கிறார் ஆளுநர்.

rajbhavan
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *