முக்கிய செய்திகள்

இஸ்ரேலின் லோட் நகரம் முழுவதும் அவசரநிலை பிரகடனம்

252

வன்முறையை கட்டுப்படுத்தும் விதமாக இஸ்ரேலின் லோட் நகரம் முழுவதும் அவசரநிலை பிரகடனத்தை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று அறிவித்தார்.

அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதன் மூலம் லோட் நகரில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட உள்ளனர்.

பாதுகாப்பு படையினர் உள்ளூர் காவல்துறையினருக்கு, வன்முறையை கட்டுப்படுத்துவதிலும் அமைதியை நிலைநாட்டுவதிலும் உதவிக்கரமாக இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் லோட் நகர் முழுவதும் ஊரடங்கு அமுலாக்கப்படவுள்ளது.

ஹமாஸ் – இஸ்ரேல் படைகள் இடையே மோதல் நடைபெற்று வரும் நிலையில் இஸ்ரேலின் லோட் நகரில் வசித்து வரும் அரேபியர்கள் வன்முறையில் ஈடுபட்டுவருவது அதிகரித்துள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *