இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு மற்றும் பாலஸ்தீன ஜனாதிபதி முகமட் அப்பாஸ் ஆகியோருடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனித்தனியாகப் பேச்சு நடத்தியுள்ளார்.
ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன தலைவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பேசியுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இருதரப்பும் அமைதியை கடைபிடிக்கும் படி அறிவுறுத்தியுள்ளார்.
காசா பகுதியில் அல் ஜசீரா, ஏபி போன்ற சர்வதேச ஊடகங்களின் அலுவலகங்கள் அமைந்திருந்த கட்டடத்தை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பின்னர் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
அமைதியை ஏற்படுத்துவதற்கு, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நடத்தியுள்ள இந்தப் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.
அமெரிக்க ஜனாதியாகப் பொறுப்பேற்ற பின்னர் மேற்கு கரையில் உள்ள பாலஸ்தீன ஜனாதிபதி முகமட் அப்பாஸ் உடன் ஜோ பைடன் பேசுவது இதுவே முதல்முறையாகும்.