ஈபிடிபி உறுப்பினர் யாழ். மாநகர சபை உறுப்பினராகச் செயற்படுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது

419

ஈபிடிபி சார்பில் தெரிவு செய்யப்பட்ட ஜெகன் எனப்படும் வேலும்மயிலும் குகேந்திரன் என்பவர், யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினராக செயற்படுவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

யாழ். மாநகர சபையின் உறுப்பினர் குகேந்திரன், பிரித்தானிய குடியுரிமையைக் கொண்டவர் என்றும், இரட்டைக் குடியுரிமையைக் கொண்ட அவரை யாழ். மாநகர சபை உறுப்பினராக செயற்பட தடை விதிக்குமாறும் கோரி, தமிழரசுக் கட்சி உறுப்பினர் ஒருவர் நீதிமன்றில் முறைப்பாடு செய்திருந்தார்.

கடந்த வாரம் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்திருந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், இந்தமனு மீதான இறுதி தீர்ப்பு அளிக்கப்படும் வரையில், குகேந்திரன் யாழ். மாநகர சபை உறுப்பினராகச் செயற்படத் தடை விதித்து இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *