முக்கிய செய்திகள்

ஈராக்- மோசூல் நகரத்தை மீட்பதற்கான சண்டை தொடர்கிறது.

1293

ஈராக் நாட்டின் மோசூல் நகரத்தை ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து மீட்பதற்கான சண்டை இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஈராக் இராணுவம் மற்றும் குர்து பெஷ்மெர்க் படையினர் தீவிரவாதிகளுடன் கடுமையாக சண்டையிட்டு வருவதாகவும், மொசூல் நகரை அண்மித்த 200 சதுரகிலோமீற்றர் பகுதி மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தரைப் படைகள் முன்னேறுவதற்கு முன்னதாக ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள இடங்களில் இராணுவ எதிர்ப்பை வலுவிழக்கச் செய்யும் வகையில் மொசூலில் வான் வழித் தாக்குதல்களை அனைத்துலக கூட்டணி நடத்தியுள்ளது என்று அமெரிக்க தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை  இராணுவ நடவடிக்கைகள் மோசூல் மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கவில்லை என்பதைக் காட்டும் ஒரு பிரச்சார காணொளியை ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *