ஈரான் தனது பொறுப்புக்கூறலை நிறைவேற்ற வேண்டும் என்று கனடா வலியுறுத்தியுள்ளது.
கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் கனடிய விமானத்தினை சுட்டு வீழ்த்தியமை தொடர்பில் ஈரான் இதுவரை மௌனமாக இருக்கின்றமைக்கு பிரதமர் ரூடோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் கனடா, ஈரானை தொடர்ந்தும் பொறுப்புக்கூறலைச் செய்யுமாறு வலியுறுத்துவதாகவும் குறிப்பிட்டார்.
உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு உரிய பதிலளிக்கும் கடப்பாடு ஈரானுக்கு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் ஈரான் இதுவரையில் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டமை; தொடர்பில் எவ்விதமான அறிக்கைகளையும் கையளிக்கவில்லை என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.