முக்கிய செய்திகள்

ஈரான் தலைவர்களை சந்திக்கத் தயார் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்

593

எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஈரான் தலைவர்களை எந்த முன் நிபந்தனையும் இல்லாமல் சந்திக்கத் தயார் என்றுஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார் .

தான் யாரை வேண்டுமானலும் சந்திப்பேன் என்றும், தனக்கு சந்திப்புகளில் நம்பிக்கை உண்டு எனவும் வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறியுள்ளார்.

டிரம்பும், இரான் அதிபர் ஹஸான் ரூஹானியும் கடந்த வாரம் வரைகூட ஒருவரைப் பார்த்து ஒருவர் எச்சரித்து வந்த நிலையில் திடீரென்று தற்போது மலர்ச்செண்டு நீட்டத் தயார் என்கிறார் டிரம்ப்.

அமெரிக்கா உள்ளிட்ட 6 நாடுகள் ஈரானுடன் அணுவாயுதத் தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ள நிலையில், அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அதிபர் ராம்ப் அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து ஈரான் மீது பொருளாதார தடைகளையும் அறிவித்துள்ளதுடன், அமெரிக்க அதிபர் டிரம்பும், ஈரான் அதிபர் ஹஸான் ரூஹானியும் கடந்த வாரம் வரைகூட ஒரு ஒருவர் எச்சரித்து வந்த நிலையில் தற்போது ஈரான் அதிபரைத் சந்திக்க தயார் என்று அறிவித்துள்ளமை வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை அதிபர் டிரம்பின் இந்த அறிவிப்பிற்கு பதிலளித்துள்ள ஈரான் அதிபர் ஹசன் ரூஹானியின் ஆலோசகர் ஹமீத் அபவுட்டாலெபி, மீண்டும் ஈரான் அணு ஒப்பந்தத்தை அமெரிக்கா ஏற்றுக்கொள்வதும், ஈரான் நாட்டின் உரிமைகளை மதிப்பதும் பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *