முக்கிய செய்திகள்

ஈரான் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் 25 ஆண்டுகால ஒத்துழைப்பு ஒப்பந்தம்

29

அமெரிக்காவின் பொருளாதார தடைகளை எதிர்கொண்டுள்ள ஈரான் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் 25 ஆண்டுகால ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

தெஹ்ரானில் ஈரானின் வெளிவிவகார அமைச்சர் மொஹமட் ஜவாத் ஸரீஃப் (Mohamed Jawad Sharif) மற்றும் சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் யி (Wang Yi) ஆகியோர் கையெழுத்திட்டனர்.

மத்திய கிழக்கு பயணத்தின் ஒரு பகுதியாகதெஹ்ரானிற்கு சென்றிருந்த வாங் யி, (Wang Yi) ஜனாதிபதி ஹசன் ரௌஹானி (Hassan Rouhani) மற்றும் உச்ச தலைவர் அலி ஹசைனி கமேனியின் (Ali Hasini Khamenei) பிரதிநிதி அலி லரிஜானி (Ali Larijani) ஆகியோரையும் சந்தித்தார்.

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் (xi jing ping) 2016 இல் ஈரானுக்கு விஜயம் செய்ததிலிருந்து இந்த ஒப்பந்தம் செயற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

மேலும் அடுத்த தசாப்தத்தில் இருதரப்பு வர்த்தகத்தை 10 மடங்குக்கு அதிகரித்து 600 பில்லியன் டொலர்களாக உயர்த்தவும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *