முக்கிய செய்திகள்

தமிழ் மக்களுக்கு தலைமைதாங்கிய தலைவர்களில் வெற்றி கண்ட ஒருவராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே!

1544

தமிழ் மக்களுக்கு தலைமைதாங்கிய தலைவர்களில் வெற்றி கண்ட ஒருவராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே இருக்கின்றார் என்று இலங்கையின் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோகனேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொணடு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினையை உலகேங்கும் கொண்டு சென்றதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே வெற்றிபெற்றிருந்தார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இப்போது இரா.சம்பந்தன் இந்தியாவையும் தாண்டி ஜ.நா சபை வரைக்கும் சென்றுள்ளார் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு, அனைத்துலக சமூகத்தின் ஒத்துழைப்பின் ஊடாக தீர்வு காணும் வழிமுறைகளை முன்னெடுத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகின்ற போதிலும், சம்பந்தருடைய முன்னெடுப்பு எந்தளவுக்கு சாத்தியமாகும் என்று தான் கருத்துக்கூற விரும்பவில்லை எனவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தந்தை செல்வாவில் இருந்து இரா.சம்பந்தன் வரை தமிழ் மக்களுக்கு தலைமைதாங்கிய தலைவர்களில் வெற்றி கண்ட ஒருவர் என்றால்டு, அது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே எனவும் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *