முக்கிய செய்திகள்

ஈழநாடு நாளிதழின் முன்னாள் உதவி ஆசிரியரான பண்டிதர் பொன்னம்பலவாணர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

51

யாழ்ப்பாண நகரில் கடந்த சனிக்கிழமை சிறிலங்கா இராணுவ வாகனம் மோதி படுகாயமடைந்த, ஈழநாடு நாளிதழின் முன்னாள் உதவி ஆசிரியரான பண்டிதர் பொன்னம்பலவாணர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை யாழ். நகரில், உந்துருளியில் பயணம் செய்த போது, சிறிலங்கா இராணுவத்தினரின் வாகனம் மோதி, 77 வயதுடைய, பண்டிதர் பொன்னம்பலவாணர் படுகாயமடைந்தார்.

யாழ்.போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பொன்னாலையைச் சேர்ந்த பண்டிதர் பொன்னம்பலவாணர் ஈழநாடு நாளிதழில் தலைமை ஒப்புநோக்குநராகவும், பின்னர், உதவி ஆசிரியராகவும் பணியாற்றியிருந்தார்.

பொன்னாலை சித்தி விநாயகர் ஆலயத்தின் அர்ச்சகராகவும், பணியாற்றி வந்த அவர், தமிழ், சமஷ்கிருதம், போன்ற மொழிகளில் சிறந்த பாண்டித்தியம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *