ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக, 33 பேருக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சிறிலங்காவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, 267 பேரில், 33 பேருக்கு எதிராகவே நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்படவுள்ளதாகவும், அவர் அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்கர்களிடம், நேற்று கூறியுள்ளார்.
ஏனையவர்களுக்கு எதிராக, ஒத்துழைப்பு வழங்கியமை, உதவி அளித்தமை போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவுள்ளதாகவும், றியர் அட்மிரல் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறன்று நடத்தப்பட்ட எட்டு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாகவும் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சிறிலங்கா காவல்துறையினர் 8 அறிக்கைகளை தயாரித்து சட்டமா அதிபரிடம் கையளித்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.