முக்கிய செய்திகள்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான ஆவணங்கள் சட்டமா அதிபரிடம்

158

ஈஸ்டர் ஞாயிறு அன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பான வழக்கின் ஆவணங்கள் சட்டமா அதிபரிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி 08 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஜனவரி 31 ஆம் திகதி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழுல் பதிவு செய்யப்பட்ட சாட்சியங்கள் தொடர்பாக சட்டமா அதிபர் சட்ட நடவடிக்கை எடுப்பார் என்றும் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *