முக்கிய செய்திகள்

உகானில் சக்தி வாய்ந்த புயல்

213

சீனாவின் ஹூபெய் மாகாணத்தின் தலைநகரான உகானை சக்திவாய்ந்த புயல் ஒன்று தாக்கியுள்ளது.

சூறாவளி காற்றினால், நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்ததுடன், ஏராளமான கட்டடங்கள் சரிந்து விழுந்துள்ளன.

100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புயலைத் தொடர்ந்து உகான் நகரில் இடைவிடாது கன மழை கொட்டி தீர்த்துள்ளது.

புயல், மழை, வெள்ளத்தினால்,  உகான் நகரில் 6 பேர் உயிரிழந்ததாகவும் 200-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, சீனாவின் ஜியாங்சு மாகாணத்துக்குட்பட்ட சுஹோ நகரை மற்றொரு புயல் தாக்கியுள்ளது. அங்கு புயலில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார் என்றும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்றும் கூறப்படுகிறது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *