உக்ரேனில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த கனேடிய படையினர் மத்தியில் கொரோனா தொற்று பரவியுள்ளதை அடுத்து, இராணுவப் பயிற்சி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், எத்தனை கனேடியப் படையினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்ற தகவலை வெளியிடுவதற்கு கனேடிய தேசிய பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
தொற்றுக்குள்ளாகியுள்ள படையினர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர் என்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள், தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும், ஒட்டாவாவில் உள்ள கூட்டு நடவடிக்கை கட்டளைப் பணியகத்தின் பேச்சாளர் கப்டன் அலெக்சியா குறோய்சர் (Alexia Croizer) தெரிவித்துள்ளார்.
உக்ரேனில் 200 கனேடிய படையினர் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.