உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பெண் சுகாதார தொண்டரின்உடல்நிலை பாதிப்பு

45

யாழ்ப்பாணத்தில், வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக,  உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பெண் சுகாதார தொண்டர் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

தமக்கான நியமனத்தை மீள வழங்கக் கோரி, வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள், இன்று 8 ஆவது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இவர்களின் போராட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் கவனத்தில் கொள்ளாத நிலையில்,  போராட்டத்தில் ஈடுபட்டு வந்த யாழ்ப்பாணம் – நிலாவரை பகுதியை சேர்ந்த செல்லத்துரை கஜனி என்ற பெண்ணின் உடல்நிலை இன்று திடீரென மோசடைந்துள்ளது.

இதையடுத்து அவர், அவசர நோயாளர் காவு வண்டி மூலம் யாழ். போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *