கொரோனா வைரஸ் எவ்வாறு பரவியது என்ற உண்மையை கண்டறிவதற்கு, உலக நாடுகள் அமெரிக்காவுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ (mike pompeo), கேட்டுக் கொண்டுள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்தின் கொரோனா பரவல் குறித்த விசாரணையை தடுப்பதற்கு சீனா, முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் மைக் பொம்பியோ (mike pompeo), குற்றம்சாட்டியுள்ளார்.
அத்துடன், மேலும் மருத்துவ ரீதியாக மூன்றுகட்ட சோதனைகளை தாண்டாத தடுப்பு மருந்துகளை அங்கீகரித்து, சீன அரசு மக்களின் உயிரோடு விளையாடி வருவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.