முக்கிய செய்திகள்

உத்தரகாண்ட்டில் 38 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன

41

உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிப்பாறை உடைந்து ஏற்பட்ட வெள்ளத்தில், உயிரிழந்த 38 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நந்தா தேவி பனிப்பாறை கடந்த 7-ஆம் திகதி உடைந்து அலெக்நந்தா, தாலிகங்கா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, தபோவன் நீர்மின் நிலைய சுரங்கம், சேறு மற்றும் இடிபாடுகளால் மூடிக்கொண்டதில், 30 தொழிலாளர்கள் வரை சிக்கிக்கொண்டனர்.

அவர்களையும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களையும் மீட்கும் பணி, இன்று 7-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதுவரை 38 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *