உயர் நீதிமன்ற கட்டடத்தில் ஏற்பட்ட தீ;சந்தேக நபர்கள் ஐவர் தொடர்பாக விசாரணை

81

கொழும்பில் உள்ள உயர் நீதிமன்ற கட்டடத்தில் ஏற்பட்ட தீ பரவலுக்கு பொறுப்புக்கூற வேண்டிய சந்தேக நபர்கள் ஐவர் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தீ பரவல் தொடர்பாக இதுவரை முன்னெடுக்கப்பட்ட குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரின் விசாரணைகளுக்கு மேலதிகமாக இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதவேளை உயர் நீதிமன்ற கட்டடத்தில் வீசப்பட்ட சிகரெட்டில் இருந்தே தீ பரவியதாகக் கூறப்படுவதை மறுக்க முடியாது என அரச இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தீ பரவல் எரிபொருள் அல்லது மின் ஒழுக்கினால் ஏற்படவில்லையென உறுதியாகியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற கட்டடத்தில் சேவையில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், உயர் நீதிமன்ற வளாகத்தில் இரகசியமாக புகைபிடித்துள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர்  கூறினர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *