உரிய அனுமதி இல்லாது அமெரிக்காவினுள் நுளைந்தமையால் 2,382 இந்தியர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

377

உரிய அனுமதி இல்லாமல் அமெரிக்காவுக்குள் நுழைந்ததாக 2382 இந்தியர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் தகவல் அறியும் சுதந்திரத்தின் மூலம் தெரியவந்துள்ளது

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற பின்னர் அங்கு வெளிநாட்டினருக்கு குடியுரிமை அளிக்கும் விவகாரத்தில் மிகுந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் உரிய அனுமதி இல்லாமல் அமெரிக்காவுக்குள் நுழைந்ததாக 2382 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு அந்த நாட்டில் உள்ள 86 சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அந்த நாட்டின் தகவல் அறியும் சுதந்திரத்தின் மூலம் இந்த விபரம் வெளிவந்துள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் இவர்களில் பெரும்பாலானவர்கள் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும், சொந்த நாட்டில் வன்முறை மற்றும் அடக்குமுறைக்கு பயந்து இவர்கள் அனைவரும் அமெரிக்காவில் தஞ்சம் அடைய வந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *