முக்கிய செய்திகள்

உரிய ஆதாரம் இல்லாமல் ஹிலாரிக்கு எதிராக விசாரணையை தொடங்கக் கூடாது – ஒபாமா

1310

அரசு இமெயில்களை கவனக்குறைவாக கையாண்டதாக கூறப்படும் விவகாரத்தில் உறுதியான ஆதாரம் இல்லாமல் ஹிலாரிக்கு எதிராக விசாரணையை தொடங்கக் கூடாது என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

ap080627039771-540x413

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி, வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது முக்கியத்துவம் வாய்ந்த அரசு தகவல்களை தனியார் இமெயில், சர்வர்கள் மூலம் அனுப்பி கவனக்குறைவாக கையாண்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஏற்கனவே விசாரணை நடத்திய எஃப்.பி.ஐ., சட்ட விரோதமான செயலில் ஹிலாரி ஈடுபடவில்லை என்று கூறி கடந்த ஜூலை மாதம் விசாரணையை முடித்துக்கொண்டது.

dem-2016-primary-lessons
இந்த நிலையில் மீண்டும இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தியிருப்பதாக எஃப்.பி.ஐ. இயக்குநர் தெரிவித்தார். இது அதிபர் தேர்தலில் ஹிலாரிக்கு பின்னடைவை ஏற்படுத்திய நிலையில் முழுமையான மற்றும் உறுதியான ஆதாரங்கள் இல்லாமல் ஹிலாரி மீதான குற்றச்சாட்டில் விசாரணை நடத்துவது ஏற்புடையது அல்ல என்று ஒபாமா தெரிவித்துள்ளார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *