முக்கிய செய்திகள்

உறுப்பினர் பதவி விலகினர்

178

கன்சர்வேட்டிக் கட்சியின் ஒன்ராரியோ நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் ஸ்வீட் (David Sweet) மற்றும் செனட்டர் டொன் பிளெட் (Don Plett) ஆகியோர் தமது பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.

கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான விதிமுறைகள் நாட்டில் அமுலாக்கப்பட்டிருந்த நிலையில் விடுமுறைக்காக வெளிநாடு சென்றிருந்த நிலையிலேயே இவர்கள் பதவிகளிலிருந்து விலகியுள்ளது.

கன்சர்வேட்டிக் கட்சியின் தலைவருக்கு எவ்விதமான முன்னறிவிப்புக்களுமின்றி ஒன்ராரியோ நாடாளுமன்ற உறுப்பினர் வெளிநாடு சென்றதை ஏற்றுக்கொண்டுள்ளார். அத்துடன் அடுத்த பொதுத்தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டள்ளார்.

நாடாமன்றில் அவர் பதவிவகித்திருந்த குழுக்களிலிருந்தும் முழுமையாக நீங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று செட்டரும் உரிய அறிப்புக்களை செய்யாது குடும்பத்தினருடன் மெக்ஸிக்கோ சென்றதை ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *