முக்கிய செய்திகள்

உறைபனிக் குளத்தில் வீழ்ந்த இரு சிறார்கள் மீட்பு

36

கிழக்கு மிசிசாகாவில் (Mississauga) றைபனி படர்ந்திருந்த குளத்துக்குள் விழுந்த 12 வயதுக்குட்பட்ட இரண்டு சிறுவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என்று பீல் பிராந்திய பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Indian Summer Trail Park இல், பனி உறைந்திருந்த வாத்துக் குளத்தின் மீது நேற்று பிற்பகல் 1.10 மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் விழுந்துள்ளனர்.

இதையடுத்து விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் அவர்களைப் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

குளிரில் விறைத்துப் போயிருந்த அவர்களுக்கு அவசர மருத்துவப் பிரிவினர் சிகிச்சை அளித்தபோதும் மருத்துவமனையில் சேர்க்கப்படும் அளவுக்கு அவர்களின் நிலை மோசமாக இருக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *