முக்கிய செய்திகள்

உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது – இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்

1476

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படம் `மெர்சல்’. அட்லி
இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான இந்த படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு
மத்தியில் உலகம் முழுக்க வெளியானது.

விஜய் இந்த படத்தில் மூன்று தோற்றத்தில் நடித்திருந்தார். விஜய் ஜோடியாக நித்யா
மேனன், சமந்தா, காஜல் அகர்வால் நடித்திருந்தனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும்,
சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த
படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

இந்த நிலையில், ஐஏஆர்ஏ என்ற சர்வதேச விருதுக்கு நடிகர் விஜய் பெயர் பரிந்துரை
செய்யப்பட்டது. மெர்சல் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் மற்றும் சர்வதேச
சிறந்த நடிகர் என இரு பிரிவுகளில் விஜய் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார். அதற்காக
இணையதளத்தில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

தற்போது இறுதிப் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் விஜய், கென்னத் ஓகோலி,
டைம் ஹசன், ஜோஷுவா ஜேக்ஷன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
இவர்கள் அனைவரும் இறுதிச்சுற்றுக்கு வந்துள்ளதாக தெரிவித்திருக்கும் ஐஏஆர்எ
வரும் 22 – ம் தேதி லண்டனில் இவ்விருது வழங்கப்பட உள்ளதாகவும்
தெரிவித்திருக்கிறது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *