உலகின் மிகப்பெரிய இந்திய நுளைவு அனுமதி மையம் வங்காளதேசத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது

419

உலகின் மிகப்பெரிய இந்திய “வீசா” எனப்படும் நுளைவிசைவு வழங்கல் மையம் வங்காளதேசத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அரசுமுறைப் பயணமாக வங்காளதேசத்திற்கு சென்றுள்ள இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வங்கதேச உள்துறை அமைச்சர் அசாதுஜமான் கானுடன் இணைந்து அந்த புதிய நுளைவு இசைவு வழங்கல் மையத்தை நேற்றுத் திறந்து வைத்துள்ளார்.

டாக்கா நகரின் ஜமுனா பியூச்சர் பார்க் பகுதியில் 18,500 சதுர அடி பரப்பளவில் இந்த இந்திய நுளைவிசைவு விண்ணப்ப மையம் கட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு அதிக எண்ணிக்கையில் வரும் சுற்றுலாப் பயணிகள் என்ற வகைப்படுத்தலில் வங்காளதேசத்தைச் சேர்ந்தவர்களும் இடம்பிடித்துள்ளனர் என்றும், கடந்த ஆண்டில் வங்காளதேசத்தைச் சேர்ந்த 14 இலட்சம் பேருக்கு நுளைவிசைவு வழங்கப்பட்டுள்ளது என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *