ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண்ணின் படுகொலைக்கு நீதி கோரி போராட்டம்.

939

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண்ணின் படுகொலைக்கு நீதி கோரி பெண்கள் அமைப்பினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.

ஊர்காவற்துறை பொது சந்தைக்கு முன்பாக புதன்கிழமை காலை 9 மணியளவில் நடைபெற்ற போராட்டத்தில் பெண்கள் அமைப்பினை ஊரவர்கள் கலந்து கொண்டு படுகொலை செய்யப்பட்ட பெண்ணிற்கு நீதி கோரி போராடினார்கள்.

அதேவேளை கர்ப்பிணி பெண் படுகொலை வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ .எம்.எம்.றியாழ் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *