ஊழளற்ற அதிகாரியாக யாழ்.பிரதேச செயலாளர் தெரிவு

106

2020ஆம் ஆண்டில் இலங்கையின் ஊழலற்ற அதிகாரிகள் தேர்வில் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் சாம்பசிவம் சுதர்ஷன் ஐவரில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு, விருது பெற்றுள்ளார்.

ரான்ஸ்பரன்ஸி இன்ரநஷனல் ஸ்ரீலங்கா  (Transparency International Sri Lanka) நிறுவனத்தால், ஊழலற்ற நிர்வாகத்துக்கான குறுஞ்செய்தி அனுப்பும் வாக்கெடுப்பில் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் எஸ்.சுதர்ஷன் பொதுமக்களின் ஆதரவுடன் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இந்த தேர்தல்  கடந்த வெள்ளிக்கிழமை முடிவடைந்த நிலையில், அவருக்கு பெருமளவில் வாக்குகள்  கிடைக்கப்பெற்றிருந்தன.

இதனையடுத்து இலங்கையின் ஊழலற்ற அதிகாரியாக தெரிவுசெய்யப்பட்ட பிரதேச செயலாளர் எஸ்.சுதர்ஷன், விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

குறித்த விருதினை முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய வழங்கி வைத்தார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *