தேர்தல் பிரசாரத்தை நாளையே தொடங்கப் போவதாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீரென அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணி தொடரும் என்றும், அதிமுக கூட்டணியில் தான் பா.ஜ.கவும் இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
தேர்தலுக்கு நாட்கள் குறைவாக உள்ளதால், நாளை சென்றாய பெருமாள் ஆலயத்தில் வழிபாடு முடித்து விட்டு எடப்பாடி சட்டசபை தொகுதியில் உள்ள பெரிய சோரகை பகுதியில் பிரசாரத்தை ஆரம்பிக்கவுள்ளேன் என்றும், தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.