எதிர்க்கட்சித் தலைவரை கொலை செய்வதற்கு சிலர் திட்டமிட்டுள்ளதாக தகவல்.

948

எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தனை படுகொலைசெய்வதற்கு சிலர் திட்டமிட்டுள்ளனர் என தமக்கு தகவல் கிடைத்ததாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பலப்பிட்டியை சேர்ந்த சிங்கள நபர் ஒருவர் கடந்த செப்டம்பர் மாதம் தனக்கு தகவல் வழங்கியதாகவும், மின்னஞ்சலொன்று ஒன்றின் மூலமும், பின்னர் தொலைபேசி அழைப்பு மூலமும் இந்த தகவல் தமக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் முதலமைச்சர் விபரம் வெளியிட்டுள்ளதாக ஆங்கில நாளேடு ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்கட்சி தலைவர் சம்பந்தனை கொலைசெய்வதற்கு தீட்டப்பட்டுள்ள  திட்டம் குறித்து தமக்கு தெரியும் என்றும், இதற்காக நபர் ஒருவருக்கு  25 மில்லியன் வழங்கப்பட்டுள்ளதாகவும்,  இந்த கொலைக்கு விடுதலைப்புலிகள் மீது  பழிபோட திட்டமிட்டுள்ளனர் எனஅந்த நபர் தெரிவித்துள்ளதாகவும் முதலமைச்சர்  கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகள் அமைப்பு இன்னமும் இயங்குகின்றது என்பதை காண்பிக்கவே அவ்வாறு திட்டமிடப்படுகின்றது என குறித்த  அந்த நபர் தெரிவித்திருந்ததாகவும் முதலமைச்சர் விபரித்துள்ளார்.

அத்துடன் தானே குறித்த அந்த  மின்னஞ்சலை அனுப்பியதாக குறிப்பிட்ட அந்த நபர், தனக்கு இது குறித்து எவ்வாறு தெரியவந்தது என்பது தொடர்பிலும், எதிர்கட்சி தலைவரை கொலை செய்யும் பொறுப்பு யாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது போன்ற விபரங்களையும் அவர் தன்னிடம் தெரிவித்ததாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

இதனை அடுத்து சில நாட்களிற்கு முன்னர் அந்த நபர் மீண்டும் தம்மோடு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டதுடன், தகவல்களை வழங்கியதற்காக பயங்கரவாத விசாரணை பிரிவின் தலைவர் டி சில்வா என்பவர்  தன்னை துன்புறுத்துவதாக  குறிப்பிட்டுள்ளார் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

ctrsampanthan

இதன் போது ஏன் தமிழர் ஒருவருக்கு உதவுகின்றீர்கள் என தாம் கேட்டிருந்தாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அந்த நபரின் தொலைபேசி இலக்கங்கள் உட்பட முக்கிய தகவல்களை காவல்த்துறை மா அதிபரிற்கு வழங்கியுள்ளதாகவும், அவர் இது குறித்து விசாரணைகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார் என்றும் விபரம் வெளியிட்டுள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன், மிகவும் பாரதூரன இந்த விடயத்தை அரசியல் கோமாளித்தனத்திற்கு பயன்படுத்த எவரும் முயலக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை தான் தமக்கு பாதுகாப்பு கோரவில்லை என்றும், இந்த விடயம் குறித்து அறிந்த பின்னர் வடமாகாண சபையே தனக்கான பாதுகாப்பை கோரியது என்றும் அவர் கூறியுள்ளார்.

அவ்வாறு  அரசாங்கத்திடம் எனக்கான பாதுகாப்பை வடமாகாணசபை கோரிய வேளை, அரசாங்கத்திடமிருந்து வந்த பதிலில் அரசியல் தொனி காணப்பட்டதாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *