வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவில் கவனஈர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார்கள்.
ஞாயிற்றுக்கிழமை காலையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் முன்பாக கவனஈர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் மரிய சுரேஷ் ஈஸ்வரி கூறினார். பின்னர் அவர்கள் ஊர்வலமாக வட்டுவாகல் பாலத்தைச் சென்றடைந்து அங்கு போராட்டம் நிறைவடையவுள்ளது.
இலங்கைக்குக் கால அவகாசம் வழங்கியதன் மூலம், இலங்கையுடன் சேர்ந்து சர்வதேச சமூகமும் தம்மை ஏமாற்றிவிட்டதாகவும் அதற்குக் எதிர்ப்புத் தெரிவித்து இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளதாகவும் மரிய சுரேஷ் ஈஸ்வரி தெரிவித்தார்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவில் கவனஈர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார்கள்.
Apr 05, 2019, 13:14 pm
404
Previous Postஎஸ்.என்.சீ லவாலீன் விவகாரத்தில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டால்..
Next Postபுதிய அரசியல் அமைப்பு உருவாக்கும் பணிகள் கைவிடப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்