சீனாவுடனான பிரச்சினைக்கு அமைதி தீர்வை எதிர்பார்க்கும் அதேவேளை, எதையும் எதிர்கொள்வதற்கும் தயாராக இருப்பதாகவும், இந்திய இராணுவ தளபதி ஜெனரல் நரவனே தெரிவித்துள்ளார்.
“கடந்த ஆண்டு கொரோனா தொற்று மற்றும் வடக்கு எல்லைகளின் நிலைமை என்பன சவால்களைக் கொண்டதாக இருந்தது.
வடக்கு எல்லைகளில் அதிக எச்சரிக்கையுடன் இருக்கிறோம்.
இந்தியா பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ளாது.
சீனாவும், பாகிஸ்தானும் இணைந்து சக்திவாய்ந்த அச்சுறுத்தலை உருவாக்குகின்றன.
அவர்களின் மோசடியான இந்த கூட்டணியை தடுக்க முடியாது. ” என்றும் இந்திய இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.