முக்கிய செய்திகள்

என் மீது மை வீசியவர்களை கடவுள் ஆசிர்வதிக்கட்டும் – கெஜ்ரிவால்

1162

டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது ராஜஸ்தான் மாநிலம், பிகானீர் பகுதியில் மாணவர் ஒருவர் மை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சங்கர் சபதாஸ் என்பவரின் இரங்கல் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ராஜஸ்தான் மாநிலம் பிகானீருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் சென்றார். இரவு 10 மணி அளவில் இரங்கல் தெரிவித்துவிட்டு அவர் வெளியே வந்தபோது, தினேஷ் ஓஜா என்பவர் கெஜ்ரிவால் ஒரு தேசி துரோகி என்று கூறியவாறு அவர் மீது மை வீசியுள்ளார். இதையடுத்து கெஜ்ரிவாலுக்கு பாதுகாப்பாக வந்திருந்த போலீசார், தினேஷ் ஓஜாவை கைது செய்தனர். விசாரணையில் அவர் பாஜக மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

aravind11

இந்த சம்பவம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள கெஜ்ரிவால், தம் மீது மை வீசியவர்களை கடவுள் ஆசிர்வதிக்கட்டும். அவர்களை வாழ்த்துவதாகவும் கூறியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *