‘எமது தொடர்போராட்டத்திற்கு பதிலென்ன’ கிளிநொச்சியில் காணமலாக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்று காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாகவும், கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி கிளிநொச்சியில் 1,390 நாட்களாக சுழற்சி முறையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
தமது கோரிக்கைகளை வலியுறுத்தும் பதாதைகளை ஏந்தியிருந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், தமக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும், முழக்கங்களையும் எழுப்பினர்.