சிறிலங்காவின் பொறுப்புக்கூறலை செய்விப்பதற்காக ஐ.நா மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு மூன்று கடிதங்களை அனுப்புவதாகவே இணக்கம் காணப்பட்டது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமன கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
முதலாவது கடிதம் தற்போது ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் மற்றும் உறுப்பு நாடுகள் ஆகியவற்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக, ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தலைவர் மற்றும் பொதுச்சபையின் உறுப்பு நாடுகள் ஆகிய தரப்புக்களுக்கும் சிறிலங்காவில் நடைபெற்ற இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலை செய்யவேண்டும் என்பதை வலிறுத்தி நடவடிக்கைகளை எடுப்பதற்கான கோரிக்கையை முன்வைக்க வேண்டும்.
மூன்றாவதாக, ஐ.நா.செயலாளர் நாயகம், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபையின் உறுப்பு நாடுகள், மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை அதிகாரிகள் ஆகியவற்றுக்கு சிறிலங்காவில் நடைபெற்ற இனப்படுகொலைக்கான சான்றாதரங்களைக் குறிப்பிட்டு அவர்களிடத்தில் எழுத்துமூலமான கோரிக்கை முன்வைக்க வேண்டும். என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ஏனைய இரண்டு கடிதங்களை அனுப்புவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ்த் மக்கள் தேசியக் கூட்டணியும் பின்னடிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.