முக்கிய செய்திகள்

ஏழு தமிழரின் விடுதலைக்கு ஆதரவு கேட்டு அற்புதம்மாள் ஆரம்பித்துள்ள நடைபயணம் !!

284

ஏழு தமிழர் விடுதலைக்கு
ஈழத் தமிழர்கள் அனைவரும் ஒருமித்து குரல் கொடுப்போம்!

ஏழு தமிழர் விடுதலைக்கு ஆயிரம் ஆயிரம் காரணங்கள் இருந்தும் ஆளுநர் தாமதிப்பது முறையல்ல- டாக்டர் ராமதாஸ்

அற்புதம்மாளுக்கு துணை நில்லுங்கள் – ஏழு தமிழர் விடுதலை குறித்து நடிகர் சத்யராஜ்

அற்புதம்மாளின் நடைப்பயணத்தில் கலந்துகொள்ளும் ஆயிர மாயிரம் தமிழர்களில் ஒருவனாக இருக்க விரும்புகிறேன் – நடிகர் ஜீ.வி.பிரகாஸ்

ஏழு தமிழரின் விடுதலைக்கு ஆதரவு கேட்டு அற்புதம்மாள் இன்று ஆரம்பித்துள்ள பயணத்திற்கு தமிழ் மக்களின் ஆதரவு பெருகி வருகிறது.

ஏழு தமிழர்களையும் தமிழ்நாடு அரசு விடுதலை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

அதன்படி ஏழு தமிழர்களையும் விடுதலை செய்யுமாறு தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளது தமிழ்நாடு அரசு.

ஏழு தமிழர்களையும் விடுதலை செய்வதில் தமது குடும்பத்திற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று ராகுல்காந்தி ஏற்கனவே தெரிவித்துவிட்டார்.

ஏழு தமிழர்களையும் விடுதலை செய்யுமாறு தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினும் பல தடவை கோரியுள்ளார்.

தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் மட்டுமன்றி பல்வேறு பொதுநல மற்றும் மனிதவுரிமை அமைப்புகளும் ஏழு தமிழர்களையும் விடுதலை செய்யுமாறு கோரி வருகின்றன.

இங்கு வருத்தத்திற்குரிய விடயம் என்னவெனில் இந்த ஏழு தமிழரில் நாலுபேர் ஈழத் தமிழர்கள். ஆனால் இதுவரையில் ஒரு ஈழத் தமிழ் தலைவரும் இவர்களுக்காக குரல் கொடுக்கவில்லை.

சாந்தனின் தாயார் சம்பந்தர் அய்யாவை நேரில் சந்தித்து கோரிக்கை விட்டிருந்தும் இதுவரை ஒருமுறைகூட சம்பந்தர் அய்யா அறிக்கைவிட வில்லை.

யாழ்ப்பாணத்திற்கு இரணைமடு தண்ணீர் விடக்கூடாது என ஓடி ஓடி அறிக்கைவிடும் சிறீதரன் எம்.பி கூட இவர்களை விடுதலை செய்யுமாறு ஒரு அறிக்கை விட முன்வரவில்லை.

இங்கு நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் என்னவென்றால் இத்தனைவருட கொடுமைக்கு பின்னரும்கூட பேரறிவாளன் “ ஈழத் தமிழரை ஆதரித்தது தவறு” என்று கூறவில்லை.

மாறாக தான் விடுதலை பெற்று வந்தால் தொடர்ந்தும் ஈழத் தமிழரை ஆதரிப்பேன் என்றே அவர் கூறியிருக்கிறார்.

அவரின் தாயார் அற்புதம்மாளும் கூட ஈழத் தமிழரை தன் மகன் ஆதரித்தது தவறு என்று கூறியதில்லை. அவரும்கூட இன்றும் ஈழத் தமிழர்களின் ஆதரவாளராகவே இருக்கிறார்.

ஆனால் எமது ஈழத் தலைவர்கள் கொஞ்சம்கூட நன்றி உணர்வு அற்றவர்களாக இருக்கிறார்கள்.

முருகன் மற்றும் நளினியின் குழந்தை சிறையில் பிறந்தது அனைவரும் அறிந்ததே. சட்டப்படி அக் குழந்தை இந்திய குடியுரிமையைக் கோர முடியும்.

ஆனால் இந்திய அரசோ லண்டனில் தற்போது இருக்கும் அக் குழந்தை தன் தாய் தந்தையரை பார்வையிடுவதற்குகூட விசா வழங்க மறுக்கிறது.

25 வருடங்களாக தன் தாய் தந்தையரை நேரில் சந்திக்க முடியாமல் இருக்கும் அப் பிள்ளைக்காவது விசா வழங்கும்படியாவது சம்பந்தர் அய்யா கேட்டிருக்கலாம்.

தமது பிள்ளை குட்டிகளுடன் சந்தோமாக இருந்து வரும் எமது ஈழத் தலைவர்கள் ஒருவர்கூட இந்த பிள்ளை மீது இரக்கம் காட்டாதது ஆச்சரியமாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல இலங்கையிலும் தேர்தல்கள் வர இருக்கின்றன. அப்போது இந்த தலைவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவோம்.

இப்போது தமிழ் மக்களின் ஆதரவு கேட்டு வரும் தாயார் அற்புதம்மாளுக்கு ஈழத் தமிழர்கள் ஒருமித்த ஆதரவை வழங்குவோம்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *