முக்கிய செய்திகள்

ஏழு பேரின் விடுதலை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

216

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்து வரும், ஏழு பேரின் விடுதலை தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தனது இல்லத்தில் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை, விடுதலை செய்ய வேண்டும் என 2014ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம்,  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

பின்னர், 7 பேரையும் விடுதலை செய்வதற்கு, பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் மீண்டும், முடிவெடுக்கப்பட்டு ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

எனினும், ஆளுநர் பன்வாரிலால் இதற்கு பதிலளிக்காமல் இழுத்தடித்து வந்த நிலையில், ஜனாதிபதியை முடிவெடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சுக்கு ஜனவரியில் கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்த நிலையில், 7 பேர் விடுதலை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று தனது இல்லத்தில் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.

இதில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அரசு தலைமை சட்டவாளர் சண்டமுகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *