முக்கிய செய்திகள்

ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம், ஜனாதிபதிக்கே

25

ராஜிவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்வது  தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம், ஜனாதிபதிக்கே உள்ளது என்று தமிழக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

ராஜிவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக, தமிழக ஆளுநர் முடிவெடுக்காமல் இழுத்தடித்து வந்த நிலையில், இது குறித்து பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது,  ஒரு வாரத்துக்குள் முடிவெடுக்க வேண்டும் என  உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்திருந்தது.

இந்தநிலையில் ஆளுநர் மாளிகை இன்று மாலை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ஏழு பேரை விடுவிக்கும் விவகாரத்தில் ஜனாதிபதிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முடிவை உச்சநீதிமன்றத்திலும் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்படுகிறது
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *