ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் 40 ஆவது பொதுக் கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ளது.
மார்ச் 22 ஆந் நாள் வரை நான்கு வார காலத்திற்கு நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் மார்ச் 20ம் நாள் இலங்கை குறித்து, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர் மிஷெல் பச்சலெட் (ஆiஉhநடடந டீயஉhநடநவ) அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிப்பதுடன், அந்த அறிக்கை குறித்து விவாதமும் நடைபெறவுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைச் சபையில் இருந்து அமெரிக்கா வெளியேறியுள்ள நிலையில், பிரித்தானியா, கனடா உட்பட்ட நாடுகளைக் கொண்ட இலங்கை தொடர்பான மையக் குழு இலங்கை குறித்த புதிய பிரேரணை ஒன்றைச் சமர்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவை சமர்ப்பிக்கவுள்ள அறிக்கை தொடர்பில் மார்ச் 05ம் நாள் மாதிரி அமர்வொன்றும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் 40 ஆவது பொதுக் கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ளது.
Feb 25, 2019, 13:56 pm
301
Previous Postஇந்தியாவும் – பாகிஸ்தானும் பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் சீனா அறிவுறுத்தியுள்ளது.
Next Postலண்டனில் மக்கள் போராட்டம் -காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு