முக்கிய செய்திகள்

ஐந்து டொரோண்டோ பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

91

கொரோனா தொற்று அச்சுறுத்தலை அடுத்து கடந்த இரண்டு நாட்களில் ஐந்து டொரோண்டோ பாடசாலைகள், தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தமது பரிந்துரைக்கு அமைய, St. Dominic Savio கத்தோலிக்க பாடசாலை, Brian Public பாடசாலை, மற்றும் Victoria Village Public பாடசாலை ஆகியவற்றின் எல்லா நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரொறன்ரோ பொது சுகாதார பிரிவு நேற்று அறிவித்திருந்தது.

இந்த நிலையில், நேற்று மாலை Etobicoke இல் உள்ள St. Eugene கத்தோலிக்க பாடசாலை, நோர்த் யோர்க்கில் உள்ள St. Roch கத்தோரிக்க பாடசாலை ஆகியனவும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் நாள் குறித்து விரைவில் தெரியப்படுத்தப்படும் என்றும் ரொறன்ரா சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *