முக்கிய செய்திகள்

ஐபோன் அறிமுகப்படுத்தவுள்ள அடுத்த அதிரடி

1358

கைப்பேசி தயாரிப்பில் முன்னணி வகிக்கும் ஐபோன் நிறுவனம் தனது ஐபோன் 7 மற்றும் 7 ப்ளஸ்ஸில் ஏற்கனவே சில்வர், கோல்ட், பிளாக், ஜெட் பிளாக், ரோஸ் கோல்ட் என ஐந்து வகையான கலர்களில் அறிமுகப்படுத்தியது.

அந்த ஐந்து நிறங்களை கொண்ட போன்களும் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இதே ரக போன்களில் ’ஜெட் வொயிட்’ கலர் விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Japanese website MacOtakara ஏனும் பிரபல வலைதளத்தில், நல்ல வெள்ளை நிறத்திலான ’ஜெட் வொயிட்’ போன்கள் ஐபோன் 7 மற்றும் 7 ப்ளஸ்ஸில் அறிமுகப்படுத்தபடவுள்ளதாக செய்தியை வெளியிட்டு ஐபோன் பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
ஏற்கனவே இந்த ஜப்பானிய வலைதளம், ஐபோன்களை பற்றி கூறிய பல தகவல்கள் பின்னர் உண்மையாக நடந்துள்ளது என்பது இதில் கவனத்தில் எடுத்து கொள்ள கூடிய விடயமாகும்.

ஆனாலும் ஆப்பிள் நிறுவனம் இது பற்றி இன்னும் அதிகாபூர்வமான தகவல் ஏதும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *