முக்கிய செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும் முடிவை சட்ட வடிவமாக்கி பிரித்தானிய நாடாளுமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது

675

பல மாதங்கள் விவாதத்துக்கு பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும் முடிவை சட்ட வடிவமாக்கி பிரித்தானிய நாடாளுமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக பிரித்தானிய நாடாளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் அதிகம் பேர் விலகும் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும் முடிவுக்கு சட்ட வடிவம் கொடுக்கும் சட்டமூலம் மீது பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பல மாதங்களாக விவாதம் நடைபெற்று வந்தது.

1972ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் இணைவது தொடர்பாக உருவாக்கப்பட்ட சட்டத்திற்கு மாற்றாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும் சட்டம் இன்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *