ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா முறைப்படி விலகும் பிரெக்ஷிட்டை தாமதம் செய்வதா, இல்லையா என்ற விடயத்தை ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் இன்று ஆராய்கிறார்கள்.
பிறஸல்ஸில் நடைபெறும் அவசர உச்சி மகாநாடு ஒன்றில், ஜூன் 30 ஆந் திகதி வரை அதைத் தாமதம் செய்யுமாறு பிரித்தானியப் பிரதமர் ம தெரீசா மே கோரிக்கை விடுத்துள்ளார்.
நிபந்தனைகளுடன் ஒரு வருடம் வரையான தாமதத்தை அனுமதிக்குமாறு ஐரோப்பிய சபையின் தலைவர் னுழயெடன வுரளம பரிந்துரை செய்துள்ளார்.
தற்போதுள்ள நிலையில், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை வெளியேறவேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
—
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா முறைப்படி விலகும் பிரெக்ஷிட்டை தாமதம் செய்வதா, இல்லையா
Apr 10, 2019, 11:33 am
417
Previous Postகருந்துளைப் படம்
Next Postஏதிலிக் கோரிக்கையாளர் தொடர்பில் நீதிமன்றம் விதித்த தீர்ப்பானது அமெரிக்காவிற்கு பாதகமான சூழ்நிலையை உருவாக்கும்