முக்கிய செய்திகள்

ஐ.நா.தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கிய ஜேர்மனியின் தீர்மானம் கவலை அளிக்கிறது; சிறிதரன்

41

சிறிலங்கா மீதான ஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்றும் போது, இணை அனுசரணை நாடாக செயற்பட்ட ஜேர்மனி தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பியனுப்ப நினைப்பது கவலை அளிக்கின்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காவில் பல தனிநபர்களும், அமைப்புக்களும் தடை செய்யப்படுகின்ற நிலையில், மனித உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் ஜேர்மனி அங்கிருக்கின்ற தமிழர்களை திருப்பியனுப்ப முனைவது பாரதூரமான நிலைமையை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜேர்மனியில் இருக்கின்ற தமிழர்கள் இப்போதைக்கு சிறிலங்காவிற்கு வந்து வாழ முடியாத சூழ்நிலை இருப்பதை ஜேர்மனியும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் கருத்திற்கொள்ள வேண்டும் என்றும் சிறீதரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜேர்மனி, இந்த நடவடிக்கையை மீள்பரிசீலனை செய்து, தீர்மானத்தைக் கைவிட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *