கொரோனா தொற்று தொடர்பாக, வுகானில் ஆய்வு செய்வதற்கு, ஐ.நா நிபுணர் குழுவுக்கு சீன அரசு அனுமதி மறுத்துள்ளது.
சீனாவின் வுகான் நகரில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசின் தோற்றம் குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்காக நிபுணர் குழு ஜனவரி முதல் வாரத்தில் சீனாவுக்கு சென்று, வுகான் நகரில் மனிதர்களிடம் முதன் முதலில் கொரோனா கண்டறியப்பட்ட இடங்களில் முழுமையாக ஆய்வு செய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், வுகான் நகரில் ஆய்வு செய்வதற்கு சர்வதேச நிபுணர் குழுவுக்கு சீன அரசு அனுமதி அளிக்கவில்லை என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் (Tedros Adhanom) தெரிவித்துள்ளார்.
நிபுணர் குழுவுக்கு அனுமதி அளிக்காமல் சீன அரசு தாமதித்து வருவது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது என அவர் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.