முக்கிய செய்திகள்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

590

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் 22 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இன்றைய அமர்வில், சிறிலங்கா தொடர்பான தீர்மானம் ஜெனிவா நேரப்படி முற்பகல் 11.30 மணியளவில் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஜெனிவாவுக்கான பிரித்தானிய பிரதிநிதி இந்த தீர்மான வரைவைச் சமர்ப்பித்து உரையாற்றியுள்ளார்.

முன்னதாக, மெய்நிகர் முறையில் வாக்கெடுப்பு முன்னெடுக்கப்படுவதால், அதுகுறித்த விதிமுறைகளை பேரவையின் தலைவர் அறிவித்தார்.

அத்துடன், மெய்நிகர் முறையில் மாதிரி வாக்கெடுப்பு ஒன்றும் நடத்தப்பட்டு பரீட்சிக்கப்பட்டது. இதனால் திட்டமிடப்பட்ட நேரத்திலும் தாமதமாகவே தீர்மானங்கள் மீதான

பிரித்தானிய பிரதிநிதியை அடுத்து, ஒஸ்ரியா, பிலிப்பைன்ஸ், ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் உரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து சிறிலங்காவின் ஜெனிவாவுக்கான வதிவிடப் பிரதிநிதி சந்திரப்பிரேம தீர்மானத்துக்குப் பதிலளித்து உரையாற்றினார்.

இதன்போது அவர் சிறிலங்கா இந்த தீர்மானத்தை நிராகரிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அதையடுத்து, சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் மீது வாக்கெடுப்பை நடத்துமாறு சீனா கோரிக்கை விடுத்திருந்தது.

அதனையடுத்து, ஜப்பான், பாகிஸ்தான், வெனிசுவேலா, ரஷ்யா, கியூபா, இந்தியா, பிரேசில், பொலிவியா,ஆகிய நாடுகள் உரையாற்றின.

இதையடுத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன் போது, 22 வாக்குகள் தீர்மானத்துக்கு ஆதரவாகவும், 11 நாடுகள் எதிராகவும் வாக்களித்துள்ளன.

14 நாடுகள் நடுநிலை வகித்துள்ளன.

வாக்கெடுப்பின் போது, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் பிரேரணைக்கு எதிராக வாக்களித்திருந்ததோடு, இந்தியா, ஜப்பான், நேபாளம் உள்ளிட்ட நாடுகள் நடுநிலைமை வகித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *