முக்கிய செய்திகள்

ஐ. நா. மனித உரிமைச் சபையின் 40 ஆவது கூட்டத்தொடரின் ஆரம்ப தினமான எதிர்வரும் 25 ஆந் திகதி கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி

301

ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் 40 ஆவது கூட்டத்தொடரின் ஆரம்ப தினமான எதிர்வரும் 25 ஆந் நாள் கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை நடத்துவதற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.
காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்துப் பதிலளிக்குமாறு அரசிடம் வலியுறுத்தி ஆரம்பித்த போராட்டம் எதிர்வரும் 25 ஆந் நாள் மூன்றாம் ஆண்டில் பிரவேசிப்பதும் குறிப்பிடத்தக்கது.
நல்லாட்சி எனக் கூறும் இனவாத அரசிற்கு துளியேனும் கால அவகாசம் வழங்கக் கூடாதென ஆணித்தரமாக வலியுறுத்தியும், உடனடியாக தமக்கான தீர்வை வழங்குமாறு சர்வதேசத்திடம் கோரிக்கை விடுத்தும் இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *