ஐ. நா.மனித உரிமைச் சபையின் கூட்டத்தொடரின்போது, இலங்கைக்கு மேலதிக கால அவகாசம்!

283

ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் எதிர்வரும் கூட்டத்தொடரின்போது, இலங்கைக்கு மேலதிக கால அவகாசம் வழங்கப்படுமென்ற எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டின் பின்னர் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் இலங்கையின் அரசு சிறிதளவு முன்னேற்றத்தைக் கண்டுள்ளதால் கால அவகாசம் வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு வார இறுதி ஏடொன்று தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட ஒரு காலத்தினுள் அனைத்து விடயங்களையும் நடைமுறைப்படுத்துமாறு இலங்கையிடம் மனித உரிமைச் சபை கோருமென அந்த ஏடு குறிப்பிட்டுள்ளது.
இந்த விடயத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிநாட்டு ராஜதந்திரிகளைச் சந்தித்து வலியுறுத்தி வருகிறதெனத் தெரியவருகிறது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *