முக்கிய செய்திகள்

ஒடாவாவின் புறநகர்ப் பகுதிகளில் நாடோடிக் கும்பல் ஒன்று கொள்ளைச் சம்பவங்களை நடத்தி விட்டு தப்பிச்செல்வதாக காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

259

ஒட்டாவாவின் புறநகர்ப் பகுதிகளில் நாடோடிக் கும்பல் ஒன்று கொள்ளைச் சம்பவங்களை நடத்தி விட்டு தப்பிச்செல்வதாக காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

யாரும் இல்லாத வீடுகளை இலக்கு வைத்து இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும், வீடுகள் உடைக்கப்பட்டு பணம், தங்க ஆபரணங்கள் மற்றும் இலத்திரனியல் சாதனங்கள் களவாடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஒடாவின் தெற்கே Kanata மற்றும் Stouffville  பகுதிகளில் இந்த ஆண்டில் குறைந்தது பதினாறு வீடுகள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக  குறிப்பிடப்படுகிறது.

அநேகமான வீட்டு உரிமையாளர்கள் பணிகளில் ஈடுபட்டிருக்கும் முற்பகல் 10.00 முதல் பிற்பகல் 2.00 மணி வரையிலான காலப் பகுதியில் அதிகளாவன கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

நாடோடிகளே இவ்வாறு கொள்ளையில் ஈடுபடுவதனால் அவர்களை கைது செய்வது சவால் மிகுந்த காரியமாக அமைந்துள்ளது என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *