முக்கிய செய்திகள்

ஒட்டுசுட்டானில் பிடிபட்ட சிறிலங்கா இராணுவ உளவாளியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்

816

அண்மையில் ஒட்டுச்சுட்டான் பகுதியில் விடுதலைப் புலிகளின் சீருடைகள் மற்றும் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் அரசியல் தலையீடு இருந்துள்ளதாகவும், இதன் காரணமாக ஒரு பெரிய துரோகம் இழைக்கப்பட்டிருப்பதாகவும் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ள அவர், ஒட்டுச்சுட்டான் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் சீருடைகள் மற்றும் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் முன்னாள் போராளி என்று குறிபபிட்டுள்ளார்.

அவர் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மானின் டொசி உளவு பிரிவில் பணியாற்றிய தினேஷ் என்பவர் என்றும், சிறிலங்கா இராணுவத்தின் ஊடாக சம்பளம் வழங்கப்பட்டு விடுதலைப் புலிகளின் திட்டங்களை அறிந்து கொள்வதற்கான உளவாளிகள் அந்த இயக்கத்திற்கு உள்ளே இன்னும் இருக்கின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

அந்த வகையில் ஒட்டுச்சுட்டான் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் சீருடைகள், கிளேமோர் குண்டு உட்பட ஆயுதங்கள் பலவற்றை மீட்பதற்கு காரணமாக இருந்த பிரதான உளவாளி யார் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது இராணுவத்துக்கு ஏற்பட்டுள்ள பாரிய இழப்பாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒட்டுசுட்டானில் கைது செய்யப்பட்ட இந்த நடவடிக்கையால் இதுபோன்ற ஒரு உளவாளிக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் விளக்கமறியலில் இருந்து வெளியே வந்ததும் கொலை செய்யப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *