முக்கிய செய்திகள்

ஒன்டாரியோவில் முதல்வர் டக் ஃபோர்ட் தலைமையிலான மாகாண அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்டுள்ள வரவு செலவுத் திட்ட சட்டம் தொடர்பில் கடும் விமர்சனங்கள்

316

ஒன்டாரியோவில் முதல்வர் டக் ஃபோர்ட்  தலைமையிலான மாகாண அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்டுள்ள வரவு செலவுத் திட்ட சட்டம் தொடர்பில் கடும் விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அரசாங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட முடியாத வகையில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டமானது அரசியல் அமைப்பிற்கு முரணான வகையில் அமைந்துள்ளது என சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஒரு சட்டத்திற்குள் பாரியளவிலான விடயங்களை உள்ளடக்கியதன் மூலம் மாகாண அரசாங்கம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் செலவுத் திட்டம் மற்றும் 199 ஏனைய சட்டத் திருத்தங்களுடன் இந்த புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *