ஒன்ராரியோவிற்கு மேலதிக சுகாதார பணியாளர்களை அனுப்புவதற்கு சமஷ்டி அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளும் நிறைந்துள்ளன.
இந்நிலையில் தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்காக தொடர்ச்சியாக கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகளை ஒன்ராரியோ அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
அந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையிலேயே சமஷ்டி அரசாங்கம் சுகாதார பணியாளர்கள் ஒரு தொகுதியினரை முதற்கட்டமாக அனுப்புகின்றமை குறிப்பிடத்தக்கது.